மே வன்முறை தொடர்பில் ராஜபக்சவினருக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன:எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி
கடந்த மே மாதம் அரச பயங்கவாதத்தை கையில் எடுத்து செயற்பட்ட ராஜபக்சவினர் மற்றும் வன்முறை குழுக்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என தான் கேள்வி எழுப்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
வெலிகடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நடிகை தமிதா அபேரத்னவின் நலன் அறிய சென்று அவரை பார்த்த பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அரச பயங்கரவாதத்தை கையில் எடுத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை இல்லை
அரச பயங்கரவாதத்தை கையில் எடுத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக அரசாங்கம் தமிதா அபேரத்ன போன்ற கலைஞர்கள், இளையோரை கைது செய்து, தனது மிலேச்சத்தனத்தை வெளிக்காட்டி வருகிறது.
கொள்கைக்காக குரல் கொடுக்கும் உரிமையை மீற முடியாது
தாம் நம்பிக்கை கொண்டுள்ள ஜனநாயக கொள்கைக்காக குரல் கொடுக்கும் உரிமையை அரசாங்கமோ அல்லது வேறு தரப்பினரோ மீற முடியாது.
மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதை எந்த வகையிலும் இடமளிக்க முடியாது. அதற்கு எதிராக எதிர்க்கட்சி நிபந்தனையின்றி குரல் கொடுக்கும் எனவும் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.