நடிகை தமிதாவை சிறையில் சென்று பார்வையிட்டுள்ள அரசியல் பிரமுகர்கள்
வெலிக்கடை மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நடிகை தமிதா அபேரத்னவை பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் சென்று இன்று நலம் விசாரித்து பார்வையிட்டுள்ளனர்.
இதன்போது எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச சிறைச்சாலைக்கு விஜயம் செய்து நடிகை தமிதா அபேரத்னவை பார்வையிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் முயற்சி
கலைஞர்களை வேட்டையாடி அவர்களை தடுத்து வைக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளை வன்மையாக கண்டிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, இரண்டு சட்டத்தரணிகளுடன் அபேரத்னவின் நலம் விசாரிப்பதற்காக சிறைச்சாலைக்கு விஜயம் செய்த தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய, வளாகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை, மாறாக சிறிது நேரம் வெளியில் இருக்க வேண்டியிருந்தது.
இதேவேளை, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவும் தமிதா அபேரத்னவை சந்தித்த பின்னர் கருத்து வெளியிடுகையில், இந்த கைதுகள் தற்போதைய ஜனாதிபதியின் ஆணைகளின் கீழ் இரகசியமான முறையில் ராஜபக்சவின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்படுவதாக கூறியுள்ளார்.