பருத்தித்துறையில் மணல் கடத்தலுக்கு துணை போகும் அதிகாரி தொடர்பில் விசாரணை!
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பொலிஸ் அதிகாரி தொடர்பிலான விசாரணை உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் முன்னெடுக்கப்படுவதாக யாழ். பிரதி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கடற்தொழில் அமைச்சர் தலைமையில் இடம்பெற்ற சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தல் தொடர்பிலான கூட்டத்தின் போது குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருந்தது.

இஸ்ரேல் - ஹமாஸ் கொடூர தாக்குதல் : நிராகரிக்கப்பட்ட உளவுத்துறை எச்சரிக்கைகள்! வெளியான அதிர்ச்சி தகவல் - செய்திகளின் தொகுப்பு (Video)
பொலிஸ் உயர் அதிகாரி அச்சுறுத்தல்
இதன்போது, பருத்தித்துறையில் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் வடமராட்சி கிழக்கில் களவாக மணல் ஏற்றுபவர்களுக்கு ஒத்துழைக்காவிட்டால் கஞ்சா வழக்கு போடுவேன் என அச்சுறுத்தல் விடுகின்றார் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
குறித்த குற்றச்சாட்டுத் தொடர்பில் உரிய விசாரணை உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் முன்னெடுக்கப்படுவதாகவும் விசாரணைகள் முடிவுற்றதும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

காஸா பகுதியில் தாக்குதலை தொடங்கியுள்ள இஸ்ரேல் கடற்படை : தாக்குதல் தொடர்பில் புதிய தகவலை வெளியிட்ட ஹமாஸ்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam
