நீதிமன்றத்திலேயே வைத்து பெண்ணிடம் இலஞ்சம் பெற்ற நபர்: நீதவான் அதிரடி உத்தரவு
மன்னார் நீதிமன்றத்தில் வைத்து இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் வவுனியா சிறைச்சாலை அலுவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த அலுவலரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
கைது செய்யப்பட்ட வவுனியா சிறைச்சாலை அலுவலர், மன்னார் நீதவான் நீதிமன்றிற்கு நேற்றுமுன்தினம் (05.11.2024) கடமைக்காக வந்துள்ளார்.
விளக்கமறியல்
இதனையடுத்து, மன்னார் நீதிமன்ற தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஒருவரை பார்வையிடுவதற்காக சென்ற பெண் ஒருவரிடம் 1000 ரூபாய் பணத்தை பலவந்தமாகப் பெற்றுக் கொண்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்தநிலையில், மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் குறித்த சிறைச்சாலை அலுவலர் பாதிக்கப்பட்ட பெண்ணினால் அடையாளம் காண்பிக்கப்பட்ட நிலையில் அவர் நீதவான் நீதிமன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த சிறைச்சாலை அலுவலரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam