முல்லைத்தீவில் பேருந்து நடத்துனருக்கு எதிராக நடவடிக்கை - பயணிகளுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்

Sri Lankan Tamils Sri Lankan Peoples Sri Lanka Government Money NPP Government
By Kajinthan Apr 30, 2026 10:59 AM GMT
Report

முல்லைத்தீவு - வவுனியா மார்க்கத்தில் பயணிக்கும் தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் அறிவிடப்படுவதாக கூறி, பேருந்து நடத்துனருக்கு உடனடியாகத் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன், கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

குறித்த மார்க்கத்தில் பயணிக்கும் சில தனியார் பேருந்துகள் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் பணத்துக்கு பற்றுச்சீட்டுகளை வழங்குவதில்லை எனவும், மீதிப் பணம் உரிய முறையில் பயணிகளுக்குத் திருப்பியளிக்கப்படுவதில்லை எனவும் அதிகார சபைக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் பேச்சுரிமையைப் பாதிக்கலாம்: பிரித்தானிய கண்காணிப்பு அமைப்பு எச்சரிக்கை

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் பேச்சுரிமையைப் பாதிக்கலாம்: பிரித்தானிய கண்காணிப்பு அமைப்பு எச்சரிக்கை

நெடுங்கேணி - வவுனியா பயணத்துக்கான நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலான கட்டணம் அறவிடப்படுவதாக ஆதாரத்துடன் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அதிக கட்டணம் அளவிடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை

இந்த முறைப்பாடு கிடைக்கப்பெற்றதையடுத்து, அதிகார சபையால் உடனடியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது, சம்பந்தப்பட்ட பேருந்து நடத்துனர் விசாரிக்கப்பட்டதில் அவர் அதிக கட்டணம் அறவிட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். இதற்கு அமைவாக அவருக்கு உடனடியாகத் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் பேருந்து நடத்துனருக்கு எதிராக நடவடிக்கை - பயணிகளுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல் | Action Against Bus Driver In Mullaitivu

அரசாங்கத்தினால் புதிதாக நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களுக்கு அமைவாகவே பணத்தைப் பெற்று அதற்கான பற்றுச்சீட்டை வழங்க வேண்டும்.

இவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விடக் கூடுதலான கட்டணம் அறவிடுபவர்களுக்கு எதிராகவும், பயணிகளுக்குப் பற்றுச்சீட்டு வழங்காதவர்களுக்கு எதிராகவும் இனிவரும் காலங்களில் மிகவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகார சபைத் தலைவர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளை, பொதுப் போக்குவரத்தின்போது பயணிகள் சேவையில் ஈடுபடும் தரப்பினரால் முறைகேடுகள் இடம்பெற்றாலோ அல்லது அதிக கட்டணம் அறவிடப்பட்டாலோ, பொதுமக்கள் தகுந்த ஆதாரங்களுடன் (பயணச்சீட்டு, ஒளிப்படங்கள் அல்லது காணொலிகள்) அதிகார சபையின் 071 9090900 என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்கு உடனடியாகத் தெரியப்படுத்த முடியும் என அதிகார சபை மீண்டும் வலியுறுத்துகின்றது. 

வெளிநாடுகள் பலவற்றில் குவிக்கப்பட்டுள்ள இலங்கையர்களின் பணம்

வெளிநாடுகள் பலவற்றில் குவிக்கப்பட்டுள்ள இலங்கையர்களின் பணம்

உக்ரைனில் தனியார் வான் பாதுகாப்புப் படைகள் அறிமுகம்: முக்கிய உட்கட்டமைப்புகளைப் பாதுகாக்க புதிய முயற்சி

உக்ரைனில் தனியார் வான் பாதுகாப்புப் படைகள் அறிமுகம்: முக்கிய உட்கட்டமைப்புகளைப் பாதுகாக்க புதிய முயற்சி

YOU MAY LIKE THIS VIDEO



மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US