நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்த புதிய திட்டம்: விஜயதாச ராஜபக்ச சுட்டிக்காட்டு
நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை மத்திய வங்கி சரியான முறையில் மேற்கொள்ளாததால், எதிர்காலத்தில் புதிய அதிகார சபையொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ச சுட்டிக்காட்டியுளார்.
2005ஆம் ஆண்டுக்குப் பின்னர் மத்திய வங்கியினால் பொருளாதாரத்தை உரிய முறையில் நிர்வகிக்க முடியாததன் காரணமாகவே தற்போதைய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நீண்டகால நன்மை திட்டம்
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அத்தோடு வரி விதிப்பினால் குறுகிய கால துன்பங்களை அனுபவித்தாலும் நீண்டகால நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |