இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் அடுத்தடுத்து பாரிய நிலநடுக்கம்
புதிய இணைப்பு
இந்தியப் பெருங்கடலில் இன்று மாலைத்தீவுக்கு அருகில் மீண்டும் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த நிலநடுக்கமானது இன்று (29) காலை 8 மணியளவில் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் சிரேஷ்ட நில அதிர்வு நிபுணர் நில்மினி தல்தேனா தெரிவித்தார்.
இலங்கைக்கு பாதிப்பு
முன்னதாக, ரிக்டர் அளவுகோலில் 4.8, 5.2 மற்றும் 5.8 என 3 நிலநடுக்கங்கள் பதிவாகியிருந்ததாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கங்கள் இந்தியப் பெருங்கடலில் மாலத்தீவுக்கு அருகில் பதிவாகியுள்ளன.
கடலுக்கு அடியில் உள்ள மலைத்தொடரில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
இந்தியப் பெருங்கடலில் இலங்கைக்கு வடகிழக்கில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
தெற்கு கடற்கரையில் இருந்து சுமார் 1000 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
புவியியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் சஞ்சய் பெரேரா இதனை உறுதி செய்துள்ளார்.
நிலநடுக்கம்
எனினும் பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 10 கிலோமீற்றர் ஆழமான கடலில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தினால் நாட்டுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அமைந்துள்ள நான்கு நில அதிர்வு அளவீடுகளில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam