பண்ணையில் ஏற்பட்ட பாரிய தீ: பல ஏக்கர் புற்தரை எரிந்து நாசம் (Video)
தேசிய பண்ணை அபிவிருத்தி சபையின் கொட்டகலை - ரொசிட்டா பண்ணையில் ஏற்பட்ட தீயின் காரணமாகப் பல ஏக்கர் புற்தரை எரிந்து நாசமாகியுள்ளது.
ஹட்டன் - நுவரெலியா பிரதான பாதையில் காணப்படும் இந்தப் புற்தரையில் நேற்றைய தினம் (26.02.2023) பிற்பகல் ஏற்பட்ட தீயின் காரணமாக இந்தப் பிரதேசம் முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்துள்ளது.
இதன்போது இந்தப் பண்ணைக்கு அருகில் உள்ள கொட்டகலை எரிபொருள் நிரப்பு நிலையம் வரை தீப்பரவியதன் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையத்தின் செயற்பாடுகள் சுமார் ஒரு மணித்தியாலம் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையத்தின் ஊழியர்களின் பெரும் முயற்சியின் காரணமாக இந்த எரிபொருள் நிரப்பு நிலையம் தீயிலிருந்து காப்பாற்றப்பட்டது.
எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் நிலையத்தில் காணப்பட்ட நீரைப் பயன்படுத்தி எரிபொருள் நிலையம்வரை பரவிய தீயினை பெரும் போராட்டத்தின் பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
எனினும் இந்த தீத்தொடர்ந்து மறுபுறம் பண்ணையின் புற்தரை வழியாகத் தொடர்ந்து பரவியுள்ளது.
பின்னர் நிரப்பு நிலையத்தின் செயற்பாடுகள் ஒரு மணித்தியாலத்தின் பின்னர்
வழமைக்குத் திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.












அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri

சன் டிவி சீரியல்களை ஓரங்கட்டி டாப் 5 TRPயில் முன்னேறிய விஜய் டிவி சீரியல்... அதிரடி மாற்றம் Cineulagam
