உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கு அரசாங்க நிதி பற்றிய குழு அங்கீகாரம்
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு முன்மொழிவுகளுக்கு அரசாங்க நிதி பற்றிய குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இரண்டாவது நாளாக இன்று (30.06.2023) பரிசீலிக்கப்பட்ட முன்மொழிவுகளுக்கமைய நிதி குழு அங்கீகாரம் வழங்கியதாக அதன் உறுப்பினரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.
கடன் மறுசீரமைப்பு
இன்று பிற்பகல் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி. சில்வா தலைமையிலான குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அரசாங்க நிதி பற்றியக் குழு நேற்று (29.06.2023) கலந்துரையாடியதுடன், கடன் மறுசீரமைப்பு தொடர்பான பூர்வாங்க முன்மொழிவுகளும் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் அதிகாரப்பூர்வ முன்மொழிவு இன்று நிதிக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
தனுஷ் இல்லை, அசுரன் படத்தில் நான் நடித்திருக்கனும், விட்டுக்கொடுத்துட்டேன்.. சொன்னது யார் பாருங்க Cineulagam
தலைநகரம் பாதுகாப்பாக இல்லை! லண்டனுக்கு இராணுவத்தை அனுப்ப வேண்டிய நேரமிது - நாதிம் ஜஹாவி News Lankasri