முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் - அமைச்சரவை முன்வைத்த திட்டங்கள் குறித்து அதிருப்தி
முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் தொடர்பில் அமைச்சரவை முன்வைத்த திட்டங்கள் குறித்து அனைத்து இலங்கை ஜம்மியத்துல் உலமா தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
இஸ்லாமிய மத போதனைகள் மற்றும் கலாச்சார நடைமுறைகளுக்கு இணங்க முஸ்லிம் சமூகத்தினரிடையே 1000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு முழுவதும் முஸ்லிம் குடும்பச் சட்டங்கள் இலங்கையில் நடைமுறையில் இருந்து வருகின்றன.
டச்சு மற்றும் ஆங்கில காலனித்துவ காலங்கள் மற்றும் சுதந்திரத்திற்குப் பிந்தைய காலம் முதல் இன்று வரை அது செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அத்துடன் முஸ்லிம் சமூகத்தின் மத மற்றும் கலாச்சார விவகாரங்களுடன் தொடர்புடையது என்பதால் சமூக பிரதிநிதிகளிடமிருந்து சரியான ஆலோசனையின் பேரில் அவ்வப்போது திருத்தங்களுக்கும் உட்படுத்தப்பட்டன.
இந்த சூழலில், முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தின் அடிப்படையில் சில சீர்திருத்தங்கள் தேவை என்பதை தமது அமைப்பு ஒப்புக்கொள்கிறது என்று ஜம்மியத்துல் உலமா கூறுகிறது.
குறிப்பாக இந்த சீர்திருத்தங்கள் மூலம் முஸ்லிம் பெண்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.
இதேவேளை இந்த விஷயம் முஸ்லிம்களால் பின்பற்றப்படும் மதத்தைப் பற்றியது என்பதால், மதத்தின் அடிப்படை போதனைகளை கருத்தில் கொண்டு பொருத்தமான சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும், மேலும் சம்பந்தப்பட்ட தாரப்புகளின் கருத்துக்களும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
எனினும், இஸ்லாமிய மத மற்றும் பொது அமைப்புகளின் கருத்துக்களை கருத்தில் கொள்ளாமல், அமைச்சரவை அமைச்சர்கள், முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் தொடர்பாக சில முடிவுகளை எடுக்கத் தொடங்கியிருப்பது வருத்தமளிப்பதாக ஜம்மியத்துல் உலமா தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பாக மதத்தின் அடிப்படைகளுக்கு உரிய மதிப்பளித்து, அமைச்சரவை எடுத்த முடிவுகளை மறு மதிப்பீடு செய்யுமாறு அரசாங்கத்தையும் நீதி அமைச்சரையும் ஜம்மியத்துல் உலமா கோரியுள்ளது.





ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam

ஜெயிலர் 2 இன்னும் ரிலீஸ் ஆகல.. அதுக்குள்ள ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு! என்ன தெரியுமா Cineulagam

Gen Z போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம் - நேபாளத்தையடுத்து மற்றொரு நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு? News Lankasri
