“ஞானசார தேரர்” தலைமையிலான செயலணி தொடர்பில் “அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா“வின் அதிகாரபூர்வ அறிவிப்பு!
ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி தொடர்பில், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியில் முஸ்லிம்கள் தமது கருத்துக்களை முன்வைக்கவேண்டும் என்று அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா இன்று கோரிக்கை விடுத்துள்ளது.
மார்க்க விவகாரங்களுக்கான அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் வழிகாட்டல்கள் தொடர்பில் இன்று கொழும்பு ஷாஹிரா கல்லுாரியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் செயலாளர் அல் ஷேய்க் எம் அர்கம் நுார் அமீத் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
இந்த செயலணி, ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வமான செயலணி என்பதால், அதில் முஸ்லிம்கள் தமது கருத்துக்களை முன்வைக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த குழுவின் தலைவர் தொடர்பில் பலருக்கும் பல கருத்துக்கள் உள்ளன.
எனினும் ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டமையால் அதற்கு அதிகாரம் இருக்கிறது.
எனவே ஜனநாயக ரீதியாக தமது முரண்பட்ட கருத்துக்களை, எவரும் அந்த செயலணிக்கு சென்று பதிவுசெய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
கலகொட அத்தே ஞானசார தேரரின் தலைமையிலான இந்த செயலணி தொடர்பில் முன்னர் முஸ்லிம்கள் மத்தியில் மாறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.
இந்தநிலையில், செயலணியின் தலைவரான கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட்ட குழுவிடம் தமது கருத்துக்களை தெரிவிக்க விரும்பாதவர்கள், செயலணியின் செயலாளர் உட்பட்ட குழுவினரிடம் தமது கருத்துக்களை முன்வைக்கவேண்டும் என்று அந்த குழுவின் உறுப்பினரான கலிலுல் ரஹ்மான், எமது செய்திச் சேவையின் ஊடாக கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





கரூரில் 41 பேர் மரணம்.. 34 மணி நேரத்துக்கு பின் வீட்டை விட்டு வெளியே வந்த விஜய்..எங்கு செல்கிறார்? Cineulagam

தப்பிக்கும் போது குணசேகரனிடம் வசமாக சிக்கிய சக்தி, தர்ஷன், பின் நடந்த பரபரப்பு சம்பவம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

மறைந்த ரோபோ ஷங்கர் குடும்பம் பட்ட கஷ்டம்.. மாதம் இவ்வளவு லட்சம் EMI கட்டவேண்டுமா? வெளிவந்த உண்மை Cineulagam
