உதய கம்மன்பிலவை பயன்படுத்தி சாதித்த இந்திய நிறுவனம்
முன்னாள் எரிசக்தி அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்ஷன யாப்பா, சந்திம வீரக்கொடி ஆகியோரை பயன்படுத்தி செய்ய முடியாததை இந்தியா, தற்போதைய எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவை (Udhaya Gammanpila) பயன்படுத்தி செய்துக்கொண்டு விட்டது என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
2003 ஆம் ஆண்டின் இறுதியில் அன்றைய எரிசக்தி அமைச்சர், இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு 20 வருடங்களுக்கான இறக்குமதி அனுமதிப் பத்திரத்தை வழங்கும் யோசனை கொண்டு வந்துள்ளார். இதனடிப்படையில், 20 ஆண்டுகளுக்கு இந்திய நிறுவனம் எண்ணெயை இறக்குமதி செய்யவும் களஞ்சியப்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்னும் இரண்டு வருடங்களில் இந்த அனுமதிப் பத்திரம் கலாவதியாகும். அதனை நீடிக்கவில்லை என்றால்,இந்திய எண்ணெய் நிறுவனம் இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்யவும் களஞ்சியப்படுத்தவும் முடியாமல் போகும்.
இந்த வசதிகள் இல்லாமல் போனால், எண்ணெய் தாங்கிகளை வைத்திருக்க வேண்டும் என்று தர்க்க ரீதியான வாதங்களை அந்த நிறுவனத்தினால், முன்வைக்க முடியாது போயிருக்கும்.
இதனால், திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை பெற்றுக்கொள்ள இந்திய நிறுவனம் பல முறை முயற்சித்தது. அது முடியாமல் போனது.
இப்படியான சூழ்நிலையில், விற்பனை செய்தவற்றையும் கைப்பற்றுவோம் எனக் கூறி ஆட்சி வந்த அரசாங்கத்தின் அமைச்சரான உதய கம்மன்பில, எண்ணெய் தாங்கிகளை இந்திய நிறுவனத்திற்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளளார்.
இந்தியா, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில், மிலிந்த மொரகொட ஊடாக இதனை செய்துக்கொள்ள முயற்சித்தது. எனினும் அது தோல்வியடைந்தது.
இந்த நிலையில், எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை 50 வருடங்களுக்கு இந்தியாவுக்கு வழங்கியுள்ளார் என நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri
