அவுஸ்திரேலியாவில் தமிழ் பெண் ஒருவரை அடிமையாக வைத்திருந்ததாக குற்றச்சாட்டு! வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Adjournment of trial
By Independent Writer Apr 10, 2021 02:52 PM GMT
Report

அவுஸ்திரேலியாவின் - மெல்பர்னில் தமிழ் பெண் ஒருவரை 8 ஆண்டுகளாக தமது வீட்டில் அடிமை போல வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள தம்பதியர் மீதான அடுத்தகட்ட வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

குறித்த தம்பதியரின் வீட்டில் 2007ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை பணிபுரிந்த இப்பெண், ஒவ்வொரு நாளும் எந்த நேரமும் வேலைசெய்ய தயாரான நிலையில் இருக்கவேண்டுமென எதிர்பார்க்கப்பட்டதாகவும், அதிகரித்த வேலைப்பளு காரணமாக இரவில் ஒரு மணிநேரம் மாத்திரமே நன்றாக உறங்கக்கூடிய சூழலில் அவர் இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சிறுவர் பராமரிப்பு, துப்பரவுப் பணி, சமையல், துணி துவைத்தல் போன்ற அனைத்துப் பணிகளுக்குமான ஊதியமாக நாளொன்றுக்கு 3.39 டொலர்கள் மாத்திரமே வழங்கப்பட்டதாகவும், வீட்டுக் கதவைத் திறப்பதென்றால்கூட தம்பதியரின் அனுமதிபெற்றுத்தான் திறக்கமுடியும் எனவும், குறித்த பெண் சார்பில் வாதாடிய Richard Maidment தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட இப்பெண் கல்வியறிவு அற்றவர் எனவும், 14 வயதில் திருமணம் செய்து 29 வயதில் பாட்டியாகிவிட்டதாகவும், தனது குடும்பத்திற்கு பண உதவி செய்வதற்காகவே குறித்த தம்பதியருடன் அவுஸ்திரேலியா வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு தடவைகள் அவுஸ்திரேலியா வந்து தங்கியிருந்துவிட்டு திரும்பிய இப்பெண் 2007ம் ஆண்டு இங்கு வந்ததன்பின்னர் வீடுதிரும்ப அனுமதிக்கப்படவில்லை எனவும் அவரது சுற்றுலா விசா எப்போதோ முடிவடைந்துவிட்டபோதிலும் இப்பெண்ணை தமது வீட்டில் தொடர்ந்தும் அடிமைபோல வைத்திருந்தார்கள் எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு ஜுலை மாதம் குறித்த பெண்ணுக்கு உடல்நிலை மோசமடைந்ததையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மெல்பர்ன் தம்பதியர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இந்நிலையில் சிறுவர் பராமரிப்பு மற்றும் வீட்டுவேலை செய்வதற்கு பணச்செலவின்றி ஒருவரை தங்கவைத்துக்கொண்டு தமது வசதியான வாழ்க்கையைத் தொடர்வதே இத்தம்பதியரின் நோக்கம் என குறித்த பெண் சார்பில் முன்னிலையான வழக்குரைஞர் Richard Maidment தெரிவித்துள்ளார்.

ஆனால் குறித்த பெண்ணை அடிமையாக வைத்திருக்கவில்லை என்றும் முழுவிருப்பத்துடனேயே அவர் தம்முடன் தங்கியிருந்ததாகவும், இவை அனைத்தும் தமக்கு எதிராக புனையப்பட்ட பொய்க் குற்றச் சாட்டுகளே என்றும் மெல்பர்ன் தம்பதியினர் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றனர்.

வீட்டு வேலைகளில் உதவிபுரிந்துவந்த அவர் ஒருபோதும் அடிமையாக நடத்தப்படவில்லை எனவும் 'அடிமை' என்ற சொற்பதம் மிகைப்படுத்தப்பட்ட ஒன்று எனவும், இதற்கேற்றாற்போல் சம்பவங்களும் மிகைப்படுத்தப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதாக அவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பிலான வழக்கு விசாரணை கடந்த சில ஆண்டுகளாக தொடரும் பின்னணியில் அடுத்தகட்ட விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடர்கிறது.  

மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US