நீதிபதிகள் தொடர்பில் சுமந்திரன் தெரிவித்த கருத்தால் வெடித்தது புதிய சர்ச்சை(Video)
அசாத் மௌலானா கூறிய சில கருத்துக்களை மையப்படுத்தி நீதியரசர் ஒருவரை மிக மோசமான கருத்துக்களை கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் விமர்சித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று முன் தினம்(05.10.2023) இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
''குறித்த நீதியரசர் பிள்ளையானின் வழக்கில் நேரடியாக தலையிட்டு தீர்ப்பு வழங்கியதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான விடயம். அந்த நீதியரசர் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக இருந்தவேளை பிள்ளையான் எந்த ஒரு சந்தர்பத்திலும் மனுதாக்கல் செய்யவில்லை.
மேலும் தான் நீதிமன்றத்திற்கு செல்லும் முன் நீதிமன்ற ஆசனத்தில் உள்ள நீதிபதியை பார்த்துதான் வழக்குகளை தயார் செய்வேன் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் இலங்கையின் சுயாதீன நீதித்துறை தொடர்பில் சுமந்திரன் மிக மோசமான கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்'' என தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,