முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் கணக்காளர் மற்றும் முகாமைத்துவ உதவியாளர் கைது!
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் தற்காலிக கணக்காளர் மற்றும் முகாமைத்துவ உதவியாளர் இருவரையும் இலங்கை லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் நேரடியாக கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம்(18.4.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு நிரந்தர கணக்காளர் இல்லாத நிலை காணப்படுகின்றது.
கைது
இந்தநிலையில், கைது செய்யப்பட்ட கணக்காளர் விவசாயத்திணைக்களத்தில் பணி புரிகின்றார். இவர் கிழமையில் ஒரு நாள் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கணக்காளராக கடமையாற்றியும் வந்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் சலவைத்தொழில் ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர் ஒருவருக்கு காசோலை ஒன்றினை வழங்குவதற்காக மாதம் தோறும் பணம் பெற்று காசோலையினை வழங்கி வந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் குறித்த சலவைத்தொழிலாளி லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கு அமைய இன்றும் வழமை போன்று காசோலையினை எடுப்பதற்கு சலவை ஒப்பந்த தாரார் தனது உறவினர் ஒருவரிடம் பணம் கொடுத்து அனுப்பி வைத்துள்ளார்.
சட்ட நடவடிக்கை
மருத்துவமனையின் தற்காலிக கணக்காளர் குறித்த பணத்தினை முகாமைத்துவ உதவியாளரிடம் கொடுக்கும் படி சொல்லியுள்ளார்.
குறித்த ஒப்பந்த தாரர் தனது பணத்தினை அரச உத்தியோகத்தர்களிடம் கையளித்த அடுத்த கணம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

கைதுசெய்யப்பட சந்தேக நபர்களான இரண்டு அரச உத்தியோகத்தர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்கள்.
மேலும், சந்தேகநபர்களை முல்லைத்தீவு பொலிஸாரிடம் ஒப்படைத்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தும் நடவடிக்கையில் லஞ்ச ஊழல் ஆணைக்குழு ஈடுபட்டுள்ளது.
முக்கியமான ஆதாரத்தை கைப்பற்றிய முத்து, சிக்கப்போவது ரோஹினியா, சிந்தாமணியா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
சோழனை நம்பாமல் சேரன், பாண்டி செய்த காரியம், ஆனால் நிலா... அட்டகாசமான அய்யனார் துணை சீரியல் Cineulagam
கோமதியிடம் அடுத்த குண்டை தூக்கிப்போட்ட மீனா, இனி நடக்கப்போவது என்ன... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam