ஜெனீவாவில் அமைச்சர் விஜித ஹேரத் வெளியிட்ட தகவல்
குற்றச் செயல்களுக்கான பொறுப்பு கூறல்கள் உள்நாட்டு பொறிமுறைமையின் கீழ் மட்டுமேயாகும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் இன்றைய தினம் ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் உள்நாட்டு செயல்முறைகளின் மூலம் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்கு உறுதியாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
தேசிய நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் பாகுபாடுகளை உருவாக்கும் வெளிப்புற செயற்பாடுகளுக்கு அனுமதியில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் உள்நாட்டு நல்லிணக்க செயல்முறைகளை வலுப்படுத்தி வருவதுடன், அவற்றின் சுயாதீனத்தன்மையை தேவையான நிதி, மனித வள ஒதுக்கீடுகள் மூலம் உறுதிசெய்கிறது என தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஒற்றுமை, மனித உரிமைகள் மற்றும் மக்களின் நலனை மேம்படுத்த அரசாங்கம் காட்டும் உறுதியை ஜனாதிபதி பலமுறை தெளிவாக விளக்கியுள்ளார் எனவும் இந்தப் பேரவயைில் தாம் கலந்துரையாடிய போதும் இதை வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.
தாம் பிரதிநிதித்துவம் செய்கிற அரசியல் இயக்கமே, 2009-ல் போர் முடிந்தவுடன், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று முதலில் கோரிக்கை வைத்தது என சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பு இதன் அவசியத்தை சுட்டிக்காட்டுவதற்கு முன்னரே நாங்கள் இதை வலியுறுத்தியிருந்தோம். எனவே, எங்களின் உறுதி என்பது மனித உரிமைகள் பேரவையின் அழுத்தத்தால் அல்ல என தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி திசாநாயக்க வலியுறுத்தியபடி, பாகுபாடுகளோ, பிரிவுகளோ இன்றி மக்களின் பன்முகத்தன்மையை மதித்து கொண்டாடும் நாடாக இலங்கை வளர வேண்டும் என்பதில் நாங்கள் உண்மையாகவும் உறுதியாகவும் உள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
இனவாதம் அல்லது தீவிரவாதம் மீண்டும் தோன்றுவதற்கு இடமளிக்கமாட்டோம் என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டதாக யாரேனும் குற்றஞ்சாட்டப்பட்டால், அவர்களின் சமூக அந்தஸ்து அல்லது பின்னணி எதுவாக இருந்தாலும், சுயாதீனமான உள்நாட்டு சட்ட செயல்முறைகளின் மூலம் விசாரணை, வழக்கு மற்றும் நீதிமன்றத்தில் நிறுத்தம் உறுதி செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
வெளிப்புற நடவடிக்கைகள் உள்நாட்டு செயல்முறைகளில் பிளவுகளை உருவாக்கி, ஏற்கனவே தொடங்கியுள்ள உண்மையான முயற்சிகளை அது பாதிக்கக்கூடும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை மீது திணிக்கப்படும் தீா்வுத் திட்டங்களை ஏற்றுக்காள்ளப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
எங்களின் உள்நாட்டு செயல்முறைகளின் மூலம் அனைத்து இலங்கையர்களின் உரிமைகள் மற்றும் நலனை மேம்படுத்த இந்த வரலாற்று வாய்ப்பை பயன்படுத்த எங்களுக்கு துணை நிற்கும்படி கேட்டுக்கொள்கிறோம் என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.





புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan
