திடீர் விபத்துக்களினால் நாளாந்தம் 35 பேர் இலங்கையில் உயிரிழப்பு
திடீர் வித்துக்கள் காரணமாக நாளாந்தம் சராசரியாக 35 பேர் வரையில் இலங்கையில் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
திடீர் விபத்துக்கள் காரணமாக நாட்டில் வருடாந்தம் 12000 பேர் உயிரிழக்கின்றனர் என சுகாதார அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஒரு ஆண்டில் சுமார் 3 முதல் 4 மில்லியன் பேர் வரையில் திடீர் விபத்துக்களுக்கு உள்ளாகின்றனர் என சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவு தெரிவித்துள்ளது.
ஒரு நாளில் சுமார் 12000 பேர் வரையில் திடீர் விபத்துக்கள் காரணமாக வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுகின்றனர் என குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறெனினும் கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஆண்டில் விபத்துக்களினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.