வவுனியாவில் பொதுமக்களால் அதிகரிக்கும் விபத்துக்கள்
வவுனியா புகையிரத நிலைய வீதியில் பொதுமக்கள் வீதி போக்குவரத்து நடைமுறைகளை பின்பற்றாது பயணம் செய்வதினால் தினசரி விபத்துக்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா புகையிரத நிலையத்திற்கு அருகே காணப்படும் புகையிரத பாதுகாப்பு கடவையின் கதவுகள் மூடப்பட்டிருக்கும் சமயங்களில் பொதுமக்கள் வீதி போக்குவரத்து நடைமுறைகளை பின்பற்றுவதில்லை என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பாதையின் இரு பக்கங்களிலும் சீரற்ற முறையில் வாகனங்களை தரித்து வைத்தல், வாகனத்தினை செலுத்துதல், புகையிரத கடவை திறந்தவுடன் எதிர்த்திசையில் வருகின்ற வாகனத்திற்கு வழி விடாது செல்லுதல் போன்ற முயைற்ற செயற்பாடுகளில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
புகையிரத பாதுகாப்பு கடவை
இதன் காரணமாக, புகையிரத நிலைய வீதியில் தினசரி இரண்டிற்கு மேற்பட்ட விபத்துக்கள் இடம்பெற்று வருவதுடன் சில சமயங்களில் மாத்திரமே குறித்த பகுதியில் பொலிஸார் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அண்மையில் மூடப்பட்டிருந்த புகையிரத பாதுகாப்பு கடவையை கடந்து சென்ற ஒருவர் கிளிநொச்சியில் புகையிரதத்தில் மோதி உயரிழந்த சம்பவம் பதிவாகியிருந்தது.
எனவே, இவ்வாறான விபத்துக்களை தடுக்க குறித்த வீதி நடைமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டியது கட்டாயமானதாகும் எனவும் அதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam