கந்தளாய் பகுதியில் ஏற்பட்ட விபத்துக்களில் பெண் உட்பட மூவர் படுகாயம்..!
கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அடுத்தடுத்து இடம்பெற்ற இரு வெவ்வேறு விபத்துக்களில் பெண் ஒருவர் உட்பட மூவர் காயமடைந்து கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று(11.05.2026) மாலை இடம்பெற்றுள்ளது.
கந்தளாய் - போட்டங்காடு பகுதியிலிருந்து நகரை நோக்கி அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, கந்தளாய் ரணவீர கடைக்கு முன்னால் வீதியைக் கடக்க முயன்ற பெண் மீது மோதி விபத்துக்குள்ளானது.
மூவர் படுகாயம்
இந்த விபத்தில் குறித்த பெண்ணும், மோட்டார் சைக்கிள் சாரதியும் பலத்த காயமடைந்து நிலையில், கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கந்தளாய் - பேராறு பகுதியில் கோழி இறைச்சியுடன் வீடு திரும்பிய மோட்டார் சைக்கிள் மீது, அந்த வழியில் வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது, காயமடைந்த இருவரும் கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவங்கள் தொடர்பில், கந்தளாய் போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam