தவறுதலாக துப்பாகி வெடித்ததால் யுவதிக்கு ஏற்பட்ட நிலை! தனியார் வங்கியில் சம்பவம்
கொழும்பு, நாரம்மல பகுதியிலுள்ள தனியார் வங்கியில் கடமையாற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் யுவதி ஒருவர் காயமடைந்துள்ளார்.
தனியார் வங்கியில் கடமையாற்றும் 20 வயதான யுவதியே இவ்வாறு காயமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த யுவதி, குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல் நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவத்தை அடுத்து, வங்கியின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்தன.
குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நாரம்மல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
