மின்சாரம் தாக்கி இளம் தாய் உயிரிழப்பு
மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கியதில் இளம் தாய் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி மூன்றாம் வட்டாரம் மஸ்ஜிதுல் ஹைர் பள்ளிவாசல் வீதியிலுள்ள வீடொன்றிலே இந்த மரணச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண் குளிர்சாதனப் பெட்டியில் இருந்த பொருட்களை எடுக்கத் திறந்தபோது குளிர்சாதனப் பெட்டியில் மின்னொழுக்கு ஏற்பட்டிருந்ததன் காரணமாக மின்சாரம் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.
உடற்கூற்றுப்பரிசோதனை முன்னெடுப்பு
இரண்டு பிள்ளைகளின் தாயான அபூபக்கர் பஸ்மியா (வயது 35) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.



