திருகோணமலை - அனுராதபுரம் பிரதான வீதியில் விபத்து: இருவர் வைத்தியசாலையில்
திருகோணமலை - அனுராதபுரம் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி இருவர் படுகாமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து துவரங்காடு சந்தியில் நேற்றைய தினம் (26.10.2022) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சீமெந்து ஏற்றி வந்த பாரிய கொள்கலன் ஒன்று, வீதியில் நின்று கொண்டிருந்த மாடுகளுடன் மோதாதவாறு திருப்பி எடுக்க முயற்சிக்கப்பட்டுள்ளது.
மின்கம்பத்துடன் மோதிய கொள்கலன்
இதன்போது குறித்த வாகனம் வீதியை விட்டு விலகி அங்கிருந்த அதி உயர் மின்னழுத்த மின்கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து காரணமாக மின்கம்பம் மற்றும் மின்கம்பிகள் சேதமடைந்ததால் திருகோணமலையின் பரவலான பகுதிகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை திருகோணமலை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





13 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி செய்துள்ள மொத்த வசூல்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
