தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து! இருவர் பலி
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (டிசம்பர் 22) காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
பரட்டுவ மற்றும் கபுடுவ ஆகிய இரண்டு இடங்களுக்கு இடையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இது குறித்து சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கையில்,
கொட்டாவையில் இருந்து மத்தளை நோக்கி பயணித்த பௌசர் ட்ரக் அதிவேக நெடுஞ்சாலையில் கவனக்குறைவாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியுள்ளது.
இதில் பாரவூர்தியில் பயணித்த 72 வயதுடைய முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதேவேளை, பௌசர் ட்ரக் வண்டியின் சாரதியான 61 வயதுடையவர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
அவர் கோனவல பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
ட்ரக் சாரதியின் உதவியாளர் படுகாயமடைந்து தற்போது மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
