மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியில் விபத்து: இருவர் படுகாயம்
மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் மதகுருமார்கள் இருவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியின் - மியான்குளம் இடம்பெற்ற குறித்த விபத்தில் காயமடைந்த இருவரும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
மரண வீடொன்றிக்கு சென்று வீடு திரும்பும் வழியில் இன்று(27.02.2024) குறித்த விபத்து இடம்பெற்றள்ளது.
மேலதிக விசாரணை
வெலிக்கந்தைப் பகுதியில் இருந்து கிரான் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் போது, மட்டக்களப்பில் இருந்து வெலிக்கந்தை நோக்கி வந்த கனரக வாகனம் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் கிரானைச் சேர்ந்த சிவஸ்ரீ.எஸ்.சன்முகம் குருக்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த ரேகன் குருக்கள் ஆகியோர்களே இவ்வாறு விபத்திற்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கனரக வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் வாகனம் கைப்பற்றப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam

உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவங்கள மிஸ் பண்ணிடாதீங்க Manithan
