கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயம்
திருகோணமலை - கண்டி பிரதான வீதியில் கார் ஒன்றும் முச்சக்கர வண்டியொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்துச் சம்பவம் இன்று (5) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஹதரஸ்கொட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலே இவ்விபத்துச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
முச்சக்கர வண்டியில் பயணித்த பெண்ணொருவரும் இரண்டு ஆண்களுமே படுகாயங்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கர வண்டியில் மோதியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காரின் சாரதியை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹதரஸ்கொட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள்.. Week end என்ஜாய் பண்ணுங்க Cineulagam
