கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி
கிளிநொச்சி - கனகபுரம் வீதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில் கிளிநொச்சி செல்வாநகர் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய அருளானந்தம் மைக்கல் எனும் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.
செல்வாநகர் பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த கப் ரக வாகனமொன்று மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது விபத்தினை ஏற்படுத்திய வாகனத்தின் சாரதி வீதிக்கு வெளியே வாகனத்தைச் செலுத்தி வாகனத்துடன் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட கிளிநொச்சி பொலிஸார் பொதுமக்கள் வழங்கிய தகவல்கள் மற்றும் , கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமெராக்களின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த சாரதி மீது போக்குவரத்து விதி கோவை சட்டத்தின் பிரகாரம் வெவ்வேறு வழக்குகள் பதிவு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
குறித்த சம்பவம் விபத்தா அல்லது கொலையா என்பது தொடர்பில் பல்வேறு கோணங்களில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
கில்லியை ஓரங்கட்டி முதல் நாள் ரீ-ரிலீஸ் வசூலில் மாஸ் காட்டிய ரஜினியின் படையப்பா... தெறிக்கும் வசூல் Cineulagam