கிளிநொச்சி A9 வீதியில் விபத்து : ஸ்தலத்திலேயே ஒருவர் பலி
கிளிநொச்சி (Kilinochchi) A9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.
குறித்த விபத்தானத இன்று(27.08.2024) காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது கனகாம்பிகைக் குளம் பகுதியைச் சேர்ந்த அருள்நேசன் அருள்வதனன் என்ற 2 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் விசாரணை
ஆட்களை ஏற்றுவதற்காக 155 ஆம் கட்டை சந்தியில் குறுந்தூர பேருந்து, தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளொன்று பேருந்தை முந்திப் பயணித்த போது அதே திசையில் வந்த பார ஊர்தி குறித்த மோட்டார் சைக்கிளை மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது
இந்நிலையில் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரே உயிரிழந்துள்ளார்.
மேலும், பாரஊர்தியின் சாரதி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதோடு, விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்ச பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri