யாழில் மோட்டார் சைக்கிள் மோதி வயோதிபர் பரிதாபமாக உயிரிழப்பு
யாழில் விபத்திற்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வயோதிபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உரும்பிராயைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான செல்லப்பா செல்வரத்தினம் (வயது 75) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சிகிச்சை பயனின்றி உயிரிழப்பு
குறித்த நபர் வீட்டில் இருந்து உரும்பிராய் காளிகோயிலுக்குச் சைக்கிளில் சென்றுள்ளார்.
பலாலியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி இடதுபுறமாகச் சென்ற அவர் கோயில் இருக்கும் வலது பக்கமாகச் சைக்கிளைச் செலுத்தி நடுக் கோட்டையும் தாண்டி ஒரு மீற்றர் தூரம் சென்ற நிலையில் பின் பக்கமாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவரை மோதித் தள்ளியுள்ளது.
விபத்தில் மயக்கமடைந்த முதியவரை விபத்தை ஏற்படுத்திய நபரே போதனா மருத்துவமனையில் சேர்த்துள்ளார். எனினும் அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
திடீர் மரண விசாரணை
மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விஜய் திரைப்பட வியாபாரங்களில் இதுதான் Highest.. பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை Cineulagam

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
