நானுஓயாவில் உந்துருளி - முச்சக்கரவண்டி மோதி விபத்து
நுவரெலியா - தலவாக்கலை ஏ - 7 பிரதான வீதியில் நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பங்களாவத்த பகுதியில் இன்று (20) காலை 8 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியாவிலிருந்து நானுஓயா புகையிரத நிலையத்திற்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஏற்றி கொண்டு பயணித்த முச்சக்கர வண்டி மீது நானுஓயா பகுதியில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த உந்துருளி ஒன்று மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
பொலிஸார் மேலதிக விசாரணை
குறித்த உந்துருளி முச்சக்கரவண்டியில் மோதியதால் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி வீதியோரத்தில் தரித்திருந்த லொறி ஒன்றுடனும் மோதியுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
@tamilnewssrilanka நானுஓயாவில் உந்துருளி முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்து! #srilankanewstamiltodaylive #diyalumafalls #archuna #viralnews #tamilnews #jaffna #tamillatestnews #srilankapolice #srilankanews #latestnews #news #police #archunaramanathan #npp #nppsrilanka #adk #mahindarajapakshe #maavai #parlimentspeech #anurakumaradissanayake ♬ original sound - TAMIL NEWS
இந்த விபத்தில், உந்துருளியில் பயணித்த ஒருவரே காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 19 மணி நேரம் முன்

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam
