மரக்கிளை முறிந்து விழுந்ததில் மாணவி பலி
மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றபோது தலையில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தலவாக்கலை – தவலந்தன்ன வீதியில் பூண்டுலோயா, பலுவத்த பிரதேசத்தில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பூண்டுலோய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
விபத்து சம்பவம்
அக்கரபத்தனை பம்பரகெலே அபகன்லி தோட்டத்தில் வசித்து வந்த விஜயராஜ் திவ்யராணி (வயது 17) என்ற பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கண்டியில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து தனது தந்தையுடன் அக்கரப்பத்தனை பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam