தந்தையுடன் வீதியில் நடந்து சென்ற சிறுவனுக்கு எமனாக மாறிய கார்!
புத்தளத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் 11 வயது சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் நேற்றைய தினம் (11.07.2023) புத்தளம், கற்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
உயிரிழந்த சிறுவன் தந்தையுடன் வீட்டுக்கு அருகில் உள்ள கடைக்குப் பொருட்களை வாங்கச் சென்றபோதே விபத்தில் சிக்கியுள்ளார்.
மேலதிக விசாரணை
இருவரும் வீதியில் நடந்து சென்றபோது பின்னால் வேகமாக வந்த கார் அவர்கள் மீது மோதியுள்ளது.
இதன்போது சம்பவ இடத்திலேயே குறித்த சிறுவன் உயிரிழந்ததோடு சிறுவனின் தந்தை சிறுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கமைய சம்பவம் தொடர்பில் காரின் சாரதியை கைது செய்துள்ள பொலிஸார், விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 16 மணி நேரம் முன்

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam
