களுவாஞ்சிகுடி பகுதியில் பாரிய விபத்து - 3 சிறுவர்கள் உட்பட 10 பேர் காயம்
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் பகுதியில் இடம்பெற்ற பாரிய விபத்துச் சம்பவத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட பத்துப்பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று(25.07.2026) காலை சம்பவித்துள்ளது.
10 பேர் காயம்
மட்டக்களப்பிலிருந்து கதிர்காமம் நோக்கிச் சென்ற காரும், கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த லொறியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன் காரணமாக மட்டக்களப்பு - கல்முனை வீதியூடான போக்குவரத்து சுமார் அரை மணித்தியாலத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டிருந்ததுடன், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் போக்குவரத்தினை வழமை நிலைக்கு கொண்டு வருவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்த விபத்தில் கதிர்காமத்திற்கு சென்று கொண்டிருந்த குடும்பத்தினரே அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளதுடன் இதில் மூன்று சிறுவர்கள் உட்பட ஏழு பேரும் காயமடைந்துள்ளனர்.
அத்துடன் லொறியில் பயணித்த மூன்று பேரும் படுகாயமைடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எமது கடவுச்சீட்டிற்குப் பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது! ஒரு நாடாக நாம் முன்னோக்கி வருகிறோம் - அமைச்சர் நளிந்த





சனி–சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
நடிகர் ஜிபி முத்து மீது தாக்குதல்.. வீட்டின் முன் மாந்திரீக பூஜை, தட்டி கேட்டதால் தாக்குதல் Cineulagam
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri