யானையுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் கோர விபத்து - ஒருவர் மரணம்
திருகோணமலை (Trincomalee) ஹொரவ்பொத்தானை பிரதான வீதி கன்னியா பகுதியில் யானையுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று இரவு (14) இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை பொது வைத்தியசாலை
குறித்த விபத்தில் வவுனியா புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த முபாரக் நிப்ராஸ் (28 வயது) உயிரிழந்துள்ளதாகவும் அவரது சக நண்பரான சயான் (22 வயது) என்பவர் காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் யானையுடன் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உயிரிழந்த இளைஞனின் சடலத்தை திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்க முடியாத நிலையில் மூதூர் அல்லது கந்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 13 மணி நேரம் முன்
வெளியே போக சொன்ன சேது, அதிர்ச்சி முடிவு எடுத்த தமிழ்ச்செல்வி... சின்ன மருமகள் சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam