வெல்லவாயவில் வாகனங்கள் மோதி விபத்து: கர்ப்பிணித்தாய் உட்பட நால்வர் படுகாயம்
வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்லவாய-தனமல்வில பிரதான வீதியில் இரண்டு முச்சக்கர வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில், இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் இரண்டு முச்சக்கர வண்டிகளிலும் பயணித்துள்ளனர்.
குறித்த விபத்தில் அவர்கள் நால்வரும் பலத்த காயமடைந்து வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பொலிஸார் விசாரணை
மேலும் விபத்தில் காயமடைந்தவர்களில் கர்ப்பிணித்தாய் ஒருவரும் அடங்குவதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் திஸ்ஸமஹாராம மற்றும் ஒக்கம்பிட்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்து குறித்து வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025