மோட்டார்சைக்கிளுடன் மோதிய வாகனம்: சிசிடிவி கமராவில் பதிவாகிய காட்சி
வாத்துவ - மொல்லிகொட பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்கு அருகில் மோட்டார்சைக்கிளுடன், கெப் வண்டியொன்று மோதி விபத்திற்குள்ளான சம்பவம் சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.
அண்மையில் நடந்துள்ள குறித்த சம்பவத்தில், மோட்டார்சைக்கிளில் பயணித்த நபர் காயமடைந்து பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் நுழைவதற்காக சாலையின் குறுக்காக மோட்டார் சைக்கிளொன்று செல்ல முயற்சித்த நிலையில் வேகமாக பயணித்த கெப் வண்டியொன்று அதன் மீது மோதியுள்ளது.
மோட்டார் சைக்கிளை கவனக்குறைவாக பாதையிலிருந்து செலுத்த முயற்சித்ததாலும், கெப் வண்டி அதிக வேகத்தில் பயணித்ததாலும் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பில் கெப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபர் இன்று நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

ஒரே ஒரு மாணவன் மற்றும் ஒரே ஒரு ஆசிரியருக்காக செயல்படும் அரசு பள்ளி.., எந்த மாநிலத்தில்? News Lankasri
