திருகோணமலையில் கோர விபத்து - இருவர் பரிதாப உயிரிழப்பு!
திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சலப்பையாறு பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் திரியாய் பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய கணபதிப்பிள்ளை கமலநாதன் மற்றும் 75 வயதுடைய சரவணமுத்து சிவராஜா ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.
திரியாய் கிராமத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் தனிப்பட்ட வேலை நிமித்தம் திரியாயிலிருந்து இறக்கக்கண்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர்.
அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்க முடியாதவை! சட்டத்தரணி ஜானக அதிகாரி தெரிவிப்பு
கட்டுப்பாட்டை மீறி..
இதன்போது, சலப்பையாறு பாலத்தைக் கடந்து வளைவுப் பகுதியில் பயணித்தபோது, எதிர்த் திசையில் வந்த 'பிக்கப்' ரக வாகனம் கட்டுப்பாட்டை மீறி மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.

குறித்த பிக்கப் ரக வாகனத்தின் பின்புற சில்லிலிருந்து திடீரென காற்று வெளியேறியமையால், வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து இழுத்துச் சென்று மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்விபத்தில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைக் குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.