திருகோணமலையில் இடம்பெற்ற கோரவிபத்து - மூவர் வைத்தியசாலையில் அனுமதி
திருகோணமலை - அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முச்சக்கர வண்டியொன்றும், டிப்பர் வாகனமொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று(18) இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில்,
விபத்தில் 43,38 மற்றும் 26 வயதுடைய இரண்டு ஆண்களும், ஒரு பெண்ணும் காயமடைந்துள்ளனர்.
அக்போபுர, ஹித்துல்ஊற்று பகுதியில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாகவும், முச்சக்கரவண்டி கார் ஒன்றினை முந்திச் செல்ல முற்பட்டபோது எதிரே வேகமாகச் சென்ற டிப்பர் வாகனம் மோதுண்டதாக தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
