சம்பூரில் விபத்து: ஐவர் படுகாயம்
சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள தங்கபுரம் பகுதியில்இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதியதில் ஐவர் படுகாயமடைந்து மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (20) மாலை இடம்பெற்றுள்ளது.
இதில் காயமடைந்த மூவர் அவசர நோயாளர் காவு வண்டி மூலமும் இருவர் முச்சக்கர வண்டியிலும் மூதூர் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
ஐவர் படுகாயம்
இந்த விபத்தில் தங்கநகரைச் சேர்ந்த 38,18,09 வயதுகளைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

இவர்கள் மீது 35, 48 வயதுகளைச் சேர்ந்தவர்கள் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் அதில் பயணித்தவர்கள் மது அருந்திருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
அத்தோடு விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்து உடைவடைந்த நிலையில் மதுபான போதல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பழனியாக நடிக்கும் ராஜ்குமாரின் மனைவி, குழந்தைகளை பார்த்துள்ளீர்களா?... இதோ Cineulagam
பிரித்தானியாவை விட்டு வெளியேறிய 45,000 இந்திய மாணவர்கள்: எச்சரிக்கும் கல்வித்துறையினர் News Lankasri