புத்தளத்தில் இடம்பெற்ற கோர விபத்து : இருவர் பலி - இருவர் வைத்தியசாலையில்...
புத்தளம், அட்டவில்லுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (13.01.2026) இரவு இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் மேலதிக விசாரணை
விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவர் சிகிச்சைக்காக புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்,

மற்றைய நபர் மேலதிக சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
மேலும், காயமடைந்த பின்னால் அமர்ந்து பயணித்தவர்கள் இருவரும் சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், இது குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |