பிலியந்தலையில் கோர விபத்து: சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழப்பு
பிலியந்தலையில் சிவில் பொறியியலாளர் ஒருவர் செலுத்திய கெப் வண்டியொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் பிலியந்தலை- ஜாலியகொட, கஸ்பேவ பிரதேசத்தில் இன்று (05.02.2023) இடம்பெற்றுள்ளது.
காளியம்மஹர பிரதேசத்தில் வசிக்கும் 56 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபரின் தலையில் பலத்த காயங்கள்
சிவில் பொறியியலாளர் செலுத்தி சென்ற கெப் வண்டி கொழும்பிலிருந்து கெஸ்பேவ நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது, பிலியந்தலையிலிருந்து வந்த மோட்டார் சைக்கிள் சிறிமங்கல பகுதியை நோக்கிச் கிளை வீதி ஊடாக செல்ல முற்பட்ட போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த நபரின் தலையில் பலத்த காயங்கள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய சிவில் பொறியியலாளர் கெஸ்பேவ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த விபத்து சம்பவம் சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சரிகமப Li’l Champs சீசன் 4ல் வெற்றிப்பெற்றவர்களுக்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? Cineulagam
