பாகிஸ்தானில் பேருந்து விபத்து : 39 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தான் - பலுசிஸ்தானின் லாஸ்பேலா மாவட்டத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 39 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பலுசிஸ்தானின் லாஸ்பேலா மாவட்டம் குவெட்டாவிலிருந்து கராச்சிக்கு கிட்டத்தட்ட 48 பயணிகளுடன் பேருந்து அதிவேகமாக சென்று கொண்டிருந்தது.
இந்த நிலையில், லாஸ்பேலா அருகே சென்ற பேருந்தை, ஒரு திருப்பத்தில் வேகமாக திருப்புவதற்கு சாரதி முயன்றுள்ளார்.
கட்டுப்பாட்டை இழந்த பேருந்து
அப்போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, அங்குள்ள பாலத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளதுடன், தீப்பிடித்து எரிந்துள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் மற்றும், தீயணைப்பு வீரர்கள் விபத்துக்குள்ளானவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்தில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு குழந்தை, ஒரு பெண் உட்பட 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளனர்.





அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல் Cineulagam

உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri
