முல்லைத்தீவில் வாகன விபத்து: மூவர் வைத்தியசாலையில் அனுமதி
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இடம் பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து நேற்று (11.01.2024) இரவு 10 மணியளவில் முறிகண்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளது.
பருத்தித்துறையிலிருந்து, கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து, பயணிகளை ஏற்றுவதற்காக பேருந்து தரிப்பிடத்தில் தரித்துள்ளது.
அதே திசையில், பயணித்த டிப்பர் வாகனம் பேருந்தின் பின்னால் மோதியுள்ள நிலையில், சம்பவத்தில் சிறு காயங்களுக்குள்ளான பயணிகள் மூவர் கிளிநொச்சி வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸாரின் அசமந்த போக்கு
குறித்த விபத்தினால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த கிளிநொச்சி பொலிஸார் போக்குவரத்து நெரிசலை சீர் செய்துள்ளனர்.
இந்நிலையில், மாங்குளம் பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் குறித்த விபத்து தொடர்பில், விசாரணைகளை ஆரம்பிக்க கால தாமதம் ஆனதால், பெரும் அசௌகரியங்களை மக்கள்
எதிர்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், மாங்குளம் பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் அதிகாரியின் அசமந்த போக்கு தொடர்பில் மேல் அதிகாரிகளின் கவனத்திற்கு பல முறை மக்களால் கொண்டு செல்லப்பட்ட போதிலும், எவ்வித மாற்றமும் இல்லை என அப்பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |












விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

இந்த 3 சூழ்நிலைகள்... இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் News Lankasri

3000 கி.மீ தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை: உக்ரைன் கையில் கிடைத்த பயங்கர ஆயுதம்! நடுக்கத்தில் ரஷ்யா News Lankasri

நயன்தாராவுடன் தனது முதல் படத்தில் நடித்துள்ள மகாநதி சீரியல் நடிகர்.. அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
