கந்தளாய் பகுதியில் விபத்து! பொலிஸ் அதிகாரி ஒருவர் மரணம்
கந்தளாய் பிரதேசத்தில் உள்ள புகையிரத கடவையில் கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து புகையிரத கடவையில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
காரில் பயணித்த பொலிஸ் எஸ்.ஐ ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய எஸ்.ஐ படுகாயமடைந்த நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்றிரவு (11) 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் கந்தளாய் தலைமையக பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் நெலுவ-எல்லகாவ வந்த பகுதியைச் சேர்ந்த (எஸ்.ஜ) டி.எல்.சிறிசேன (58 வயது) எனவும், படுகாயமடைந்தவர் அதே பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மாத்தளை-மஹாவெல பகுதியைச் சேர்ந்த (எஸ்.ஜ) டி.எம்.டி.பீ. திசாநாயக்க (55 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் கந்தளாய் தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.











இது இங்கிலாந்து போலவே இல்லை... பாதிக்குப் பாதி புலம்பெயர்ந்தோர் வாழும் பிரித்தானிய நகரம் News Lankasri

தங்கம் அதிகம் வைத்திருக்கும் 7 முக்கிய நாடுகள்: தங்கத்தை குவிப்பதற்கான ரகசியம் இதுதான் News Lankasri
