யாழில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த லொறி விபத்து: ஒருவர் படுகாயம்(Video)
திருகோணமலை -ஹொரவ்பொத்தான பிரதான வீதி மஹதிவுல்வெவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் லொறியின் சாரதி காயமடைந்த நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து இன்று (20.08.2023) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
லொறியுடன் மோதியதில் விபத்து
யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த லொறி வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
இதன்போது யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த லொறியின் சாரதியான யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாக கொண்ட எஸ்.திலீபன் (38) என்பவர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
குறித்த விபத்து தொடர்பில் மொரவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam

சிறுவயதில் முத்துவிற்கு என்ன ஆனது, மனோஜ் என்ன செய்தார்... சிறகடிக்க ஆசை சீரியல் ஷாக்கிங் புரொமோ... Cineulagam

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam
