கொடிகாமம் விபத்தில் வயோதிபர் உயிரிழப்பு! - இளைஞர் படுகாயம்
யாழ். கொடிகாமம் - கச்சாய் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,மற்றுமொரு இளைஞர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்து இன்றிரவு இடம்பெற்றுள்ளது.
யாழ். கொடிகாமம் - கச்சாய் பகுதியைச் சேர்ந்த செல்லையா சற்குணநாதன் (வயது 78) எனும் வயோதிபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொடிகாமம் - கச்சாய் வீதி ஊடாக மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர், சைக்கிளில் பயணித்த குறித்த வயோதிபரை மோதி விபத்துக்குள்ளாக்கியுள்ளார்.
இதன்போது, விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கிருஷ்ணகுமார் சுகிந்தன் (வயது 27) எனும் இளைஞரையும், வயோதிபரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.
இந்நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பயனின்றி வயோதிபர் உயிரிழந்த நிலையில், இளைஞர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri
