தெற்கு அதிவேகசாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த வாகனத்தால் பரபரப்பு
தெற்கு அதிவேக வீதியின் கொட்டாவை பகுதியில் இரண்டு பொறியியலாளர்கள் பயணித்த கெப் ரக வண்டியொன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
இச்சம்பவம் இன்று (10.09.2024) காலை இடம்பெற்றுள்ளது.
குறித்த தீ விபத்தின் போது கெப் ரக வண்டியில் பயணித்தவர்களுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதேசத்தில் உள்ள நிறுவனமொன்றின் பொறியியலாளர்கள் இருவர் காலி பிரதேசத்தில் வர்த்தகர்களுக்கான பயிற்சி பட்டறை ஒன்றை நடத்துவதற்காக சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயணைப்பு வாகனங்கள்
வாகனத்தின் முன்பக்கத்தில் இருந்து புகை மற்றும் தீப்பற்றியுள்ள நிலையில் இரண்டு பொறியியலாளர்கள் மற்றும் சாரதி ஆகியோர் வாகனத்தை விட்டு வெளியே வந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, தீ விபத்து ஏற்பட்டதையடுத்து உடனடியாக தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு தீயை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, வாகனத்தின் சுமார் 75 வீதமான பகுதி தீயில் எரிந்து சேதமாகியுள்ள நிலையில் இயந்திரக் கோளாறு காரணமாக தீப்பற்றியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அதேவேளை, தீ விபத்து காரணமாக கடுவெலயிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்ற வாகனங்கள் சுமார் 15 நிமிடங்கள் வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்துருகிரிய அதிவேக வீதியின் கட்டுப்பாட்டு மத்திய நிலையம் மேற்கொண்டு வருகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri
