தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலப்பகுதியில் இரு சிறுவர்களின் உயிரை காவு கொண்ட விபத்து
ஹம்பேகமுவ - மயிலவல பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் சிக்கி சிறுவர்கள் இருவர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
வேலிஓய நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியானது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்தள்ளது.
சம்பவத்தில் 16 மற்றும் 17 வயதுடைய சிறுவர்கள் இருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் இருந்த சந்தர்ப்பத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
