கம்பஹாவில் நடந்த விபத்து: சம்பவ இடத்தில் உயிரிழந்த முதியவர்
கம்பஹா - பியகமை பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் வயோதிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
நேற்று(14.02.2026) பியகமை பகுதியில் வீதியின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த வயோதிபர் மீது, பின்னால் வந்த டிப்பர் ரக வாகனம் ஒன்று மோதியுள்ளது.
உயிரிழப்பு
அதிவேகமாக வந்த டிப்பர் வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மோதியதே இந்த விபத்துக்குக் காரணம் எனப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் பியகமை பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதியைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து பியகமை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், கைது செய்யப்பட்ட சாரதியை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ள பெருந்தொகை அரச சொத்துக்கள்! சிக்கலில் இருந்து தப்பிக்க நாமல் தீட்டும் சதித்திட்டம்