கோர விபத்தில் இளம் மனைவி பலி - படுகாயம் அடைந்துள்ள கணவன்
சிலாபம் - ஆனமடுவ வீதியில் பல்லம, பிரதேசத்தில் கெப் வண்டியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் பெண் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு சம்பவித்த விபத்தில் மாதம்பே, தானியவல்லகம பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த 32 வயதுடைய, உயிரிழந்த பெண்ணின் கணவன் சிகிச்சைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீதி விபத்து
விபத்துக்குள்ளான கெப் வண்டி சிலாபத்தில் இருந்து ஆனமடுவ நோக்கி சென்ற போது முன்னால் வந்த தம்பதியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.
விபத்தின் போது பெண் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றது தெரியவந்துள்ளது.
சாரதி கைது
விபத்துடன் தொடர்புடைய கெப் வண்டியின் சாரதி பல்லம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அட்டபாகே, பிடகம பிரதேசத்தில் வசிக்கும் 37 வயதுடையவராவார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan

இந்திய விமானப்படைத் திறனை அதிகரிக்க மாற்று திட்டம்., F-35, Su-57E போர் விமானங்களை தவிர்க்க வாய்ப்பு News Lankasri
