அராலி பாலத்தடியில் மோட்டார் சைக்கிள் மீது அரச பேருந்து மோதி விபத்து
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பாலத்தடியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் முதியவர் ஒருவர் யாழ்ப்பாணம் (Jaffna) போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்தானது, இன்று (26) காலை இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், அராலி அம்மன் கோவில் பக்கத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த முதியவர், காரைநகர் - யாழ்ப்பாணம் பிரதான வீதிக்குள் நுழைந்துள்ளார்.
பொலிஸ் விசாரணை
இதன்போது, காரைநகர் - யாழ்ப்பாணம் இடையே சேவையில் ஈடுபடும் அரச பேருந்தும், தனியார் பேருந்தும் போட்டி போட்டுக் கொண்டு வந்துள்ள நிலையில், மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவர் மீது அரச பேருந்து மோதியுள்ளது. இந்நிலையில் முதியவர் படுகாயம் அடைந்துள்ளார்.
இந்நிலையில், அங்கிருந்தவர்கள் முதியவரை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
அதேவேளை, இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
